DEAR ALL,
Referring Shri. Najan's book on "Thithi nithya devigal", I have composed this simple song (in kummi mettu) for readers to get the grace of nithya devis in easier form.
கணபதி ஸ்துதி
௦௦0. யோகராஜன் குருநாதன் தந்த எங்கள்
இஷ்ட தெய்வமாம் கணபதியை
எல்லாச்செயலுக்கும் முன்னே நிற்கச்சொல்லி
நித்யா தேவிகளை போற்றிடுவோம்
நித்யா தேவி ஸ்துதி
1. ஒன்னாம் திதியில் உத்தமியாம்- அந்த
காமேஸ்வரியையே போற்றிடுவோம்
பொன்னாம் மேனியும் புஷ்பபாணமுமே
கொண்டு வந்தே நம்மை காத்திடுவாள்
2. ரெண்டாம் திதியில் முக்கண்ணியாம்- பக
மாலினி தேவியை போற்றிடுவோம்
ஆறு கைகளோடு ஆறுதல் சொல்லிட
ஆனந்தமாகவே வந்திடுவாள்
3. மூன்றாம் திதியில் நான்கு கரம் கொண்ட
நித்யக்லின்னையை போற்றிடுவோம்
பாசமங்குசம் பானபாத்ரம் அபயம்
கொண்டும தாலசை வந்திடுவாள்
4. நான்காம் திதியில் சொக்கதங்க வர்ணி
நாயகி பேருண்டா வந்திடுவாள்
பாசாங்குசமுடன் கத்தி கேடயமும்
வஜ்ராயுதம் கதை வைத்திருப்பாள்
5. ஐந்தாம் திதியில் அழகி சுந்தரி
வஹ்னி வாசினியை வாழ்த்திடுவோம்
சங்கு தாமரையும் மாதுலிங்கப்பழமும்
புஷ்பபாணம் வில்லும் கொண்டிருப்பாள்
6. ஆறாம் திதியில் ஜாலந்தர தேவியாம்
வஜ்ரேஸ்வரியை வணங்கிடுவோம்
தங்கப்படகினில் நான்குகரம் கொண்டு
தாயவளும் நம்மைக்காத்திடுவாள்
7. ஏழாம் திதியின் நாயகியாம்- சிவ
தூதியை என்றென்றும் போற்றிடுவோம்
பாசாங்குசம் கட்கம் கேடயம் கதையுடன்
ரத்னபாத்ரம் கொண்டு வந்திடுவாள்
8. எட்டாம் திதியில் தோதலா தேவியாம்
கருநிற த்வரிதையை போற்றிடுவோம்
இலைதழை ஆடைகள் சூடிக்கொண்டே அவள்
ஈரிருக்கை கொண்டு வந்திடுவாள்
9. ஒன்பதாம் திதியில் யாவரும் போற்றிடும்
குலசுந்தரியைக் கும்பிடுவோம்
ஓராறு வதனமும் ஈராறு கரங்களும்
கொண்டு வந்தே கரையேற்றிடுவாள்
10. பத்தாம் திதியில் சைதன்ய ரூபியாம்
சாஸ்வத நித்யையை சார்ந்திடுவோம்
பன்னிரு கரமுடன் பொன்னன் சூர்யன் போல
மின்னிக்கொண்டே அவள் வந்திடுவாள்
11. பதினோராம் திதியில் நீலவர்னியாம்
நீலபதாகயை நம்பிடுவோம்
பச்சைக் கிளியேந்தி பத்துக்கரமுடன்
பாசம் வைத்தே பாதுகாத்திடுவாள்
12. பனிரெண்டாம் திதியில் சிம்ஹவாகினியாம்
பரதேவி விஜயாவைப் பணிந்திடுவோம்
பத்துக்கரமோடு பிறைமதி சூடியே
சக்திகள் சூழ்ந்திட வந்திடுவாள்
13. பதிமூன்றாம் திதியில் பொன்னிறத்தி - எங்கள்
சர்வமங்களாவைப் போற்றிடுவோம்
மாதுளம்பழமுடன் தாமரை மலரேந்தி
வரதாபயம் காட்டி வந்திடுவாள்
14. பதினான்காம் திதியில் அக்னிஸ்வருபிணி
ஜ்வாலாமாலினியை சரணடைந்தோம்
ஆறுமுகத்துடன் சூலமேந்தியவள்
கோரும் வரங்களைத் தந்திடுவாள்
15. பதினைந்தாம் திதியில் உதயகதிர் போன்ற
சித்ரா தேவியினைப் போற்றிடுவோம்
நான்குகரங்களில் பாசாங்குசம் கொண்டு
நாயகியும் நம்மைக் காத்திடுவாள்
நித்யா தேவிகளின் நாமங்கள் சொல்லியே
நித்தமும் போற்றிட செல்வமோங்கும்
நிச்சயமாகவே அன்னையின் பேரருள்
கச்சிதமாகவே வந்து சேரும்.
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment